தமிழ்நாடு பதிவு துறை கேள்வி பதில்கள்
பவர் பத்திரம் ரத்து செய்யாமல் சொத்தைக் கிரயம் செய்ய முடியுமா? நில உரிமையாளர் ஆனந்த் என்பவர் 1996-ம் ஆண்டு குமார் என்பவருக்கு நிலம் விற்பனைசெய்ய பவர் பத்திரம் எழுதிக் கொடுத் துள்ளார் (பவர் ஏஜெண்டாக). பிறகு நில உரிமையாளரே (ஆனந்த்) தனது கவனக்குறைவால் பவர் பத்திரம் இரத்துசெய்யப்படாமலேயே 2000-ம் ஆண்டு எனக்கு (இராமக்கவுண்டர்) அதே நிலத்தைக் கிரயம்செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் பவர் ஏஜெண்டான குமார் என்பவர் 1996-ம் ஆண்டு செய்த பவர் பத்திரம் மூலமாக 2008-ம் ஆண்டு தனது மனைவி மீது கிரயம் செய்துகொண்டு, தற்போது அந்த நிலம் எங்களுக்கு (குமார்) உரிமையானது என்கிறார். (இன்றுவரை நில உரிமையாளர் ஆனந்த் மீதுதான் பட்டா உள்ளது) தற்போது இந்த நிலம் சட்டப்படி யாருக்கு உரிமையானது? -- ஆனந்த குமார் நில உரிமையாளர் ஆனந்த் தனக்குச் சொந்தமான ஒரு சொத்தினை விற்பனை செய்வதற்காக குமார் என்பவரைத் தனது முகவராக நியமித்து அதிகாரப் பத்திரம் எழுதிப் பதிவுசெய்திருந்தாலும், தனது முகவர் மூலமாக இல்லாமல் தானே நேரில் சென்று அந்தச் சொத்தை விற்பனை செய்யவும் விற்பனைப் பத்திரப் பதிவுசெய்யவும் அவருக்குச் சட்டப்படி உரிமை உள்ளது. நில உ...