Posts

Right To Information Act (RTI) VAO not PIO

Is Village Administrative Officer a Public Information Officer (PIO)? This question arise to many people in Tamilnadu. In revenue department a VAO is public information officer or not? Since he is holding a separate government officer in village representing the government. State information commission on 30.08.2019 has given a clear order in this regard. I have attached the pdf of this order copy declaring VAO not PIO. The commission headed by State Information Commissioner clearly stated that Head quarter Deputy Thasilar is information officer in Taluk officer.   Order from State Information Commission  

Tamilnadu VAO (Village Admin officer) Contact Numbers

 Revenue department was the parent department for all Government departments. Its is headed by District Revenue officer (DRO) at District Level. Revenue Divisional Officer (RDO) at Divisional Level. Tahsildar at Taluk Lelvel. Each Taluk is divided into Firka headed by Revenue Inspector. Each Firka consists several revenue villages headed by Village Administrative Officer or VAO. As of 19-11-2022 there are 17,662 revenue  villages in Tamilnadu. Here is a pdf list with phone numbers of VAOs. VAO Contact mobile numbers

அங்கீகாரம் பெறாத வீட்டு மனைக்கு DTCP அங்கீகாரம் பெறுவது எப்படி?

Image

செட்டில் மெண்டு லேண்டு ரிக்கார்டு SLR

1)S.L.R  எஸ் .எல்.ஆர் ஆவணம் செட்டில் மெண்டு லேண்டு ரிக்கார்டு என்பதன் சுருக்க சொல் தான் SLR ஆகும். வருவாய்துறையில் 1920 க்கு முன் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் செட்டில்மெண்டு சர்வே முடிந்த பிறகு உருவாக்கபட்ட நில உரிமையாளர் பெயர் பட்டியல் நிலத்தின் வகை மண்வயணம் விதிக்கபட்ட வரி அதன் பரப்பு உட்பட அனைத்து விவரங்களும் அதில் இருக்கும். அதன் பரப்பின் அலகுகள் பிரிட்டிஷ் இம்பாரியல் சிஸ்டம் என்பதால் ஏக்கர் செண்டு கணக்குகளில் பரப்பு இருக்கும். இது தமிழகத்தில் 1920 என்று ஒரே ஆண்டில் உருவாக்கபட்ட கணக்கு அல்ல!! சில ஊரில் 1913, சில ஊரில் 1905, சில ஊரில் 1911 என்று   வேறு வேறு ஆண்டுகளில் செட்டில்மெண்டு ரிக்கார்டு உருவாக்கபட்டு இருக்கும். ஒரே ஆண்டில் தமிழ்நாட்டை முழுவதும் செட்டில்மெண்டு சர்வே செய்து பெயர் பட்டியல் தயாரிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளலாம். இதனை பைசலாதி ரிஜிஸ்டர் என்றும் சொல்லுவார்கள். 2) RSLR ரீ செட்டில்மெண்டு லேண்ட் ரிக்கார்டு: எஸ்.எல்.ஆரில் நில உரிமை முறையில் ஜமீன் இனாம் நிலங்கள் என்ற மேலவாரி நில உரிமை முறை இருந்திருக்கும். 1947 இல் இருந்து 1960 வரை படிபடியாக ஜமீன் ம...

வருவாய் பதிவு மாற்றங்கள்

பட்டா மாற்றுதல் 1. உரிமையாளர்கள் தாங்களாகவே தங்கள் உரிமையை மாற்றிவிடுதல் 2. நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மற்றும் வருவாய்த் துறையினரின் விற்பனைகளால் மாறுதல் 3. வாரிசுதாரருக்கு சட்ட முறையினால் மாறுதல் *என மூன்று வகைப்படும். உரிமையாளர்கள் தாங்களாகவே தங்கள் உரிமையை மாற்றி விடுதல் நிலத்தின் பட்டாதாரர் தன் நிலத்தை தனியொருவருக்கு விற்பனை செய்தல் அல்லது தானம் கொடுத்தல். மற்றொருவர் நிலத்துடன் தன் நிலத்தை பரிவர்த்தனை செய்தல். தனிநபர் தன் நிலத்தின் உரிமையை அரசுக்கு விட்டு விடுதல் நிலங்களை பாகப்பிரிவினை செய்தல். நிலங்களை அவரவர் பங்கிற்கு ஏற்ப உட்பிரிவு செய்தல். தனியார் நிலங்களின் நன்செய் / புன்செய் வகைப்பாடுகளை மாற்றுதல் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மற்றும் வருவாய்த்துறையின் விற்பனைகளால் மாறுதல்: நீதிமன்றத்தின் தீர்ப்புகளால் நில உரிமை மாறுபடுதல். நீதிமன்றத்தால் நிலங்கள் விற்கப்படுதல். *அரசு வரி பாக்கிக்காக தனியார் நிலங்களை அரசு ஏலம் விட்டு அரசு வாங்கியது / அதனை தனி நபருக்கு ஏலம் விடுவது. நிலமெடுப்பு மூலமாக, தனியார் நிலங்கள் எடுக்கப்படுதல். வாரிசு இல்லாததால் அரசுக்கு வரப்பெற்ற* சொத்துக்கள். வாரிசுதார...

தமிழ்நாடு பதிவு துறை கேள்வி பதில்கள்

பவர் பத்திரம் ரத்து செய்யாமல் சொத்தைக் கிரயம் செய்ய முடியுமா? நில உரிமையாளர் ஆனந்த் என்பவர் 1996-ம் ஆண்டு குமார் என்பவருக்கு நிலம் விற்பனைசெய்ய பவர் பத்திரம் எழுதிக் கொடுத் துள்ளார் (பவர் ஏஜெண்டாக). பிறகு நில உரிமையாளரே (ஆனந்த்) தனது கவனக்குறைவால் பவர் பத்திரம் இரத்துசெய்யப்படாமலேயே 2000-ம் ஆண்டு எனக்கு (இராமக்கவுண்டர்) அதே நிலத்தைக் கிரயம்செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் பவர் ஏஜெண்டான குமார் என்பவர் 1996-ம் ஆண்டு செய்த பவர் பத்திரம் மூலமாக 2008-ம் ஆண்டு தனது மனைவி மீது கிரயம் செய்துகொண்டு, தற்போது அந்த நிலம் எங்களுக்கு (குமார்) உரிமையானது என்கிறார். (இன்றுவரை நில உரிமையாளர் ஆனந்த் மீதுதான் பட்டா உள்ளது) தற்போது இந்த நிலம் சட்டப்படி யாருக்கு உரிமையானது? --  ஆனந்த குமார் நில உரிமையாளர் ஆனந்த் தனக்குச் சொந்தமான ஒரு சொத்தினை விற்பனை செய்வதற்காக குமார் என்பவரைத் தனது முகவராக நியமித்து அதிகாரப் பத்திரம் எழுதிப் பதிவுசெய்திருந்தாலும், தனது முகவர் மூலமாக இல்லாமல் தானே நேரில் சென்று அந்தச் சொத்தை விற்பனை செய்யவும் விற்பனைப் பத்திரப் பதிவுசெய்யவும் அவருக்குச் சட்டப்படி உரிமை உள்ளது. நில உ...

நில ஆக்கிரமிப்பு அரசாணை 540

 அரசாணை 540 என்ன சொல்கிறது? முதலில் தாசில்தாருக்கு புகார் மனு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தின் புல எண்  உள்ளிட்ட விவரங்களுடன்  அரசாணை எண்-540 மூலம் அகற்றவேண்டும் எனக் குறிப்பிட்டு... அந்தப் பகுதியின் தாசில்தார் அவர்களுக்கு பதிவுத் தபாலில் மனு ஒன்றை அனுப்ப வேண்டும்.  உடனே, தாசில்தார் ஆக்கிரமிப்புப் பகுதியைப் பார்வையிட்டு அதனை உறுதி செய்த பிறகு, ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளுங்கள் என்று ஆக்கிரமிப்பாளரின் முகவரிக்கு நோட்டீஸ் மூலம் உத்தரவிட வேண்டும்.  ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றால்...  வட்டாட்சியர், நில அளவையாளர் உள்ளிட்ட துறை அலுவலர்கள் நேரடியாக சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, அகற்றியது தொடர்பான நடவடிக்கை அறிக்கை நகலை மனுதாரருக்கு வழங்க வேண்டும்.  ஆக்கிரமிப்புகளைப் பார்வையிடுதல், அகற்றுதல், மனுதாரருக்கு அறிக்கை அளித்தல் ஆகிய அனைத்து செயல்களையும் 60 நாட்களுக்குள் அதிகாரிகள் முடிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..  முதல் மேல்முறையீடு ஆக்கிரமிப்பை தாசில்தார் அகற்றவில்லை என்றாலோ, அகற்றியதில் புகார்தாரருக்கு...