Posts

Showing posts from December, 2020

செட்டில் மெண்டு லேண்டு ரிக்கார்டு SLR

1)S.L.R  எஸ் .எல்.ஆர் ஆவணம் செட்டில் மெண்டு லேண்டு ரிக்கார்டு என்பதன் சுருக்க சொல் தான் SLR ஆகும். வருவாய்துறையில் 1920 க்கு முன் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் செட்டில்மெண்டு சர்வே முடிந்த பிறகு உருவாக்கபட்ட நில உரிமையாளர் பெயர் பட்டியல் நிலத்தின் வகை மண்வயணம் விதிக்கபட்ட வரி அதன் பரப்பு உட்பட அனைத்து விவரங்களும் அதில் இருக்கும். அதன் பரப்பின் அலகுகள் பிரிட்டிஷ் இம்பாரியல் சிஸ்டம் என்பதால் ஏக்கர் செண்டு கணக்குகளில் பரப்பு இருக்கும். இது தமிழகத்தில் 1920 என்று ஒரே ஆண்டில் உருவாக்கபட்ட கணக்கு அல்ல!! சில ஊரில் 1913, சில ஊரில் 1905, சில ஊரில் 1911 என்று   வேறு வேறு ஆண்டுகளில் செட்டில்மெண்டு ரிக்கார்டு உருவாக்கபட்டு இருக்கும். ஒரே ஆண்டில் தமிழ்நாட்டை முழுவதும் செட்டில்மெண்டு சர்வே செய்து பெயர் பட்டியல் தயாரிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளலாம். இதனை பைசலாதி ரிஜிஸ்டர் என்றும் சொல்லுவார்கள். 2) RSLR ரீ செட்டில்மெண்டு லேண்ட் ரிக்கார்டு: எஸ்.எல்.ஆரில் நில உரிமை முறையில் ஜமீன் இனாம் நிலங்கள் என்ற மேலவாரி நில உரிமை முறை இருந்திருக்கும். 1947 இல் இருந்து 1960 வரை படிபடியாக ஜமீன் ம...

வருவாய் பதிவு மாற்றங்கள்

பட்டா மாற்றுதல் 1. உரிமையாளர்கள் தாங்களாகவே தங்கள் உரிமையை மாற்றிவிடுதல் 2. நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மற்றும் வருவாய்த் துறையினரின் விற்பனைகளால் மாறுதல் 3. வாரிசுதாரருக்கு சட்ட முறையினால் மாறுதல் *என மூன்று வகைப்படும். உரிமையாளர்கள் தாங்களாகவே தங்கள் உரிமையை மாற்றி விடுதல் நிலத்தின் பட்டாதாரர் தன் நிலத்தை தனியொருவருக்கு விற்பனை செய்தல் அல்லது தானம் கொடுத்தல். மற்றொருவர் நிலத்துடன் தன் நிலத்தை பரிவர்த்தனை செய்தல். தனிநபர் தன் நிலத்தின் உரிமையை அரசுக்கு விட்டு விடுதல் நிலங்களை பாகப்பிரிவினை செய்தல். நிலங்களை அவரவர் பங்கிற்கு ஏற்ப உட்பிரிவு செய்தல். தனியார் நிலங்களின் நன்செய் / புன்செய் வகைப்பாடுகளை மாற்றுதல் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மற்றும் வருவாய்த்துறையின் விற்பனைகளால் மாறுதல்: நீதிமன்றத்தின் தீர்ப்புகளால் நில உரிமை மாறுபடுதல். நீதிமன்றத்தால் நிலங்கள் விற்கப்படுதல். *அரசு வரி பாக்கிக்காக தனியார் நிலங்களை அரசு ஏலம் விட்டு அரசு வாங்கியது / அதனை தனி நபருக்கு ஏலம் விடுவது. நிலமெடுப்பு மூலமாக, தனியார் நிலங்கள் எடுக்கப்படுதல். வாரிசு இல்லாததால் அரசுக்கு வரப்பெற்ற* சொத்துக்கள். வாரிசுதார...

தமிழ்நாடு பதிவு துறை கேள்வி பதில்கள்

பவர் பத்திரம் ரத்து செய்யாமல் சொத்தைக் கிரயம் செய்ய முடியுமா? நில உரிமையாளர் ஆனந்த் என்பவர் 1996-ம் ஆண்டு குமார் என்பவருக்கு நிலம் விற்பனைசெய்ய பவர் பத்திரம் எழுதிக் கொடுத் துள்ளார் (பவர் ஏஜெண்டாக). பிறகு நில உரிமையாளரே (ஆனந்த்) தனது கவனக்குறைவால் பவர் பத்திரம் இரத்துசெய்யப்படாமலேயே 2000-ம் ஆண்டு எனக்கு (இராமக்கவுண்டர்) அதே நிலத்தைக் கிரயம்செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் பவர் ஏஜெண்டான குமார் என்பவர் 1996-ம் ஆண்டு செய்த பவர் பத்திரம் மூலமாக 2008-ம் ஆண்டு தனது மனைவி மீது கிரயம் செய்துகொண்டு, தற்போது அந்த நிலம் எங்களுக்கு (குமார்) உரிமையானது என்கிறார். (இன்றுவரை நில உரிமையாளர் ஆனந்த் மீதுதான் பட்டா உள்ளது) தற்போது இந்த நிலம் சட்டப்படி யாருக்கு உரிமையானது? --  ஆனந்த குமார் நில உரிமையாளர் ஆனந்த் தனக்குச் சொந்தமான ஒரு சொத்தினை விற்பனை செய்வதற்காக குமார் என்பவரைத் தனது முகவராக நியமித்து அதிகாரப் பத்திரம் எழுதிப் பதிவுசெய்திருந்தாலும், தனது முகவர் மூலமாக இல்லாமல் தானே நேரில் சென்று அந்தச் சொத்தை விற்பனை செய்யவும் விற்பனைப் பத்திரப் பதிவுசெய்யவும் அவருக்குச் சட்டப்படி உரிமை உள்ளது. நில உ...

நில ஆக்கிரமிப்பு அரசாணை 540

 அரசாணை 540 என்ன சொல்கிறது? முதலில் தாசில்தாருக்கு புகார் மனு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தின் புல எண்  உள்ளிட்ட விவரங்களுடன்  அரசாணை எண்-540 மூலம் அகற்றவேண்டும் எனக் குறிப்பிட்டு... அந்தப் பகுதியின் தாசில்தார் அவர்களுக்கு பதிவுத் தபாலில் மனு ஒன்றை அனுப்ப வேண்டும்.  உடனே, தாசில்தார் ஆக்கிரமிப்புப் பகுதியைப் பார்வையிட்டு அதனை உறுதி செய்த பிறகு, ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளுங்கள் என்று ஆக்கிரமிப்பாளரின் முகவரிக்கு நோட்டீஸ் மூலம் உத்தரவிட வேண்டும்.  ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றால்...  வட்டாட்சியர், நில அளவையாளர் உள்ளிட்ட துறை அலுவலர்கள் நேரடியாக சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, அகற்றியது தொடர்பான நடவடிக்கை அறிக்கை நகலை மனுதாரருக்கு வழங்க வேண்டும்.  ஆக்கிரமிப்புகளைப் பார்வையிடுதல், அகற்றுதல், மனுதாரருக்கு அறிக்கை அளித்தல் ஆகிய அனைத்து செயல்களையும் 60 நாட்களுக்குள் அதிகாரிகள் முடிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..  முதல் மேல்முறையீடு ஆக்கிரமிப்பை தாசில்தார் அகற்றவில்லை என்றாலோ, அகற்றியதில் புகார்தாரருக்கு...

survey jobs in Tamilnadu government

 நில அளவை துறையில் போதிய நில அளவை பணிக்கு ஆட்கள் இல்லாத காரணத்தால் பணிகள் முடிய காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க  Diploma in Civil engineering படித்தவர்களுக்கு மூன்று மாதம் நில அளவை பயிற்சி அளித்து,பிறகு  license surveyor for non government employee எனும் புதிய திட்டம் மூலம் நில அளவை பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யும் புதிய முறையை அரசு அறிவித்துள்ளது. எனவே தங்களுக்கு தெரிந்த Diploma in Civil engineering முடித்தவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கிறோம்.

நில அளவைகள் [சர்வே] பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...!

சர்வே பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 7 சங்கதிகள் :- 1. சர்வே இரண்டு பிரிவுகளாக மாநில அரசு பிரிக்கிறது. 1. நில அளவை துறை 2. நில வரிதிட்ட துறை 2. புலப்படம், கிராம வரைபடம் எல்லாம் நில அளவை துறையினால் தயாரிக்கப்படுகிறது. 3. “அ” பதிவேடு (A. Register) நில வரி திட்ட துறையினரால் உருவாக்கப்படுகிறது. 4. மாநில அரசின் நில அள வைகளை நகர நில அளவை , நத்தம் நில அளவை, மலை கிராம நில அளவை, மறு நில அளவை, வட்ட அளவில் நாள் தோறும் நடைபெறும் பட்டா மாறுதல் சம்மந்தமான நில அளவைகள் என பிரிக்கப்படுகிறது. 5. 1. கிராம வரைபடம், 2. D ஸ்கேட்ச் ( நன்செய், புன்செய், மானவளி, நத்தம், புறம்போக்கு பகுதிகளை பிரித்து காட்டும் வரைபடம்) 3. புலப்படம் 4.சர்வே கற்கள் பதிவேடு 5. டிப்போ பதிவேடு ( கிராமத்தில் இருக்கும் ஸ்டாக் வைக்கப்பட்ட கற்கள், நில அளவை சங்கிலி உட்பட உபகரணங்கள் இருக்கும் டிப்போ ) போன்ற ஆவணங்ள் கிராம நில அளவையில் இருக்கும். 6. ஒவ்வொரு நில உரிமையாளரும் சர்வே செய்து போடப்பட்ட கற்களை பராமரிக்க வேண்டும். எல்லை கல்லை பாதுகாப்பது , அந்த கல் தொட்டு கொண்டு இருக்கும் புலன்களுடைய பட்டாதரரின் கூட்டு பொறுப்பு ஆகும். 7. மத்திய அரசினா...

Manual of Land Surveying

This book has enough information for new surveyors and other staff in revenue department. Manual of Land Surveying was compiled by R. G. GORDON, I.C.S. Superintendent of Land Records and Registration, With THE APPROVAL OF the Settlement Commissioner and Director of Land Records. released in the year 1912. It describes preliminary and general principles of surveying, chain and cross staff surveying, the measurement  of fields, practical measurement etc., Though latest digital survey equipments and GPS are used in todays surveying chain and cross staff are still used in government survey departments of many states in India. You can download and use the books  https://drive.google.com/file/d/1Ydyi6erWDcKTfu_OfMIBmqgnEpHBdwwj/view?usp=sharing

FMB (Field Measurement Book - புல வரைபடம்) என்றால் என்ன?

 நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது .. பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை  குறிப்பாக நிலவரைபடம்   FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை  அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது  எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்  FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..  சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் : 1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும். 2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE). 3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள். 4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும். 5. இரண்டு G லைனில் ஏதாவது ...

புறம்போக்கு நிலம் என்றால் என்ன...?

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்ய முடியாத நிலங்களான, கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால், போன்ற நீர்நிலைகள், சாலை, மேய்ச்சல் தரிசு, இடுகாடு, போன்ற பொதுப் பயன்பாட்டிற்கான நிலப்பகுதிகள் புறம்போக்கு எனக் குறிக்கப்படுகின்றன.  இப் புறம்போக்கு நிலங்கள் தனியாரல்லாத, மாநில அரசு, நடுவண் அரசு, மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் பராமரிக்கப்படுகின்றவை ஆகும். புறம்போக்கு சொல் விளக்கம் :- தமிழ்நாட்டில் நிலப் பயன்பாடு தொடர்பான பதிவுகளில் சோழர்கள் காலத்திலிருந்தே புறம்போக்கு என்கிற சொல் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. இந்த இடங்கள் ‘போக்கு’, அதாவது வருவாய் ஆவணங்களுக்கு வெளியே (புறம்) இருப்பதால் ‘புறம்போக்கு' எனப்பட்டன. அரசனோ - அரசோ, புறம்போக்குப் பகுதிகளில் இருந்து எந்த வரியையும் எதிர்பார்க்க முடியாது. உங்களின் நிலம் புறம்போக்கா...? அப்போ நீங்கள் அறிந்து கொள்ள  வேண்டியவை...! 1. அரசின் கட்டுபாட்டில் (அ) அரசினுடைய நிலங்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக உள்ள நிலங்களை அரசு புறம்போக்கு நிலங்கள் என வகைபடுத்தப்பட்டுள்ளது. 2. கல்லாங்குத்து மேடு போன்று இருக்கும் நிலங்களை அரசு தீர்வை ஏற்படாத தரிசு என்று வகைப்படு...

நில அளவை (தமிழ்நாடு)

 தமிழ்நாட்டில் பண்டைய காலத்தில் நிலத்தின் அளவு மதிப்பு (பரப்பை) குழி, வேலி, மா, ஏக்கர் என பேச்சு நடைமுறையிலும் ஹெக்டேர் என்ற அளவீட்டு முறையிலும் குறிக்கப்படுகிறது. வீட்டு மனைகளைப் பொருத்த மட்டில் சதுரஅடிக் கணக்கிலும், சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரங்களில் கிரவுண்டு என்ற அளவீட்டிலும் குறிப்பிடப் படுகிறது. அளவை விளக்கம் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சி நடத்தியபோது அவர்களின் அரசை நிர்வகிக்க வரி தேவைப்பட்டது .இந்தியா ஒரு விவசாய நாடு ஒவ்வொருவரும் அவர்களின் விவசாயப் பரப்புக்கு ஏற்றவாறு வரி நிர்ணயிக்க வேண்டியது அவசியமாகியது. ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதியை அளவை செய்து அனைத்தையும் மெட்ரிக் முறைக்கு மாற்றினார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் அளவைப் பணி தொடங்க ஓர் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினர், அதுவே இன்றுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பிரிவுள்ள முதன்மை கட்டிடமாகும். அங்கு நில அளவைப் பணிக்கு ஆட்களை தேர்வு செய்து பயிற்சி வழங்கினர். பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு 1902 முதல் 1910 வரை நிலவரிகளை வசூல் (LAND TAX-COLLECTOR) செய்வதற்கு ஏற்றாற் போல நில அளவை செய்யப்பட்டு நிலத்தீர...